4 மாதங்களாக சம்பளம் இல்லை- ஆப்கன் ஆசிரியர்கள்

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி, தலிபான்கள் தங்களுக்கு நான்கு மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததால், உடனடியாக சம்பளம் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், தங்கள் குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க இயலாத நிலையில் உள்ளதாகவும், பசி தங்கள் குடும்பங்களை அச்சுறுத்துவதாகவும் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய ஆசிரியர் சங்க தலைவர் முகமது சபீர் மஷால், “அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் வீட்டு உபயோக பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், இப்போது அவர்களிடம் விற்க எதுவும் இல்லை. பல ஆசிரியர்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூட பணம் இல்லை, அவர்களது வீடுகளுக்கு மின்சாரம் இல்லை” என்று கூறினார். இந்த ஒன்றுகூடலில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், இதில் 10 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், காபூலில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவி மிஷனின் (UNAMA) வாயிலில் சமங்கன் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கடந்த 14 மாதங்களாக நிலுவையில் உள்ள தங்களின் சம்பளத்தை வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்