petrol price reduced : ஜார்க்கண்ட் அரசு ஜனவரி 26 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விலையை 25 ரூபாய் குறைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார். ஜார்கண்ட் முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து அவர் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 சலுகை வழங்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது.petrol price reduced
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநில அளவில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் மீது லிட்டருக்கு 25 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். விலைக்குறைப்பு குடியரசு தின விழாவான ஜனவரி 26-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இதையும் படிங்க : secret of bouncy hair : அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !



