அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை..!

மத்திய பட்ஜெட் 2021 -2022 அறிவிப்புக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என தகவல்கள் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.13 ரூபாய்க்கும், டீசல் விலையில் 33 காசுகள் உயர்ந்து 82.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . இந்த விலை காலை முதல் அமலுக்கு வந்தது.