கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி

உத்தரகண்டில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
‘மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.

இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே தாக்கியுள்ளது.

உத்தரகண்டில் இதுவரை 15 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன், கொரோனாவால் பதிக்கப்பட்டு எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் கருப்பு பூஞ்சையால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.