ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி !

கரோனா தொற்றின் பரவல் தமிழகத்தை தாக்கி வருகிறது.இந்நிலையில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது.ஆலையை திறக்க அனுமதி அளித்தால் தினம் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதர முடியும் என தெரிவித்தது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.