சென்னையில் இனி குப்பை கொட்டுவதற்கு கட்டணம் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை மாநகர மக்களுக்கும், சிறு, குறு நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கும் திறந்த வழிபாட்டுத்தலங்களின் விழாக்களுக்கும் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் விரோதமான அ.தி.மு.க. அரசின் இந்த “குப்பை கொட்டக் கட்டணம்’ என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.