தனுஷ்கோடி மக்களின் கோரிக்கை என்ன?

2017ம் ஆண்டு மத்திய அரசு 70 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை அமைத்தது. எனினும், எஞ்சியிருக்கும் கட்டடங்களில் உள்ள சுண்ணாம்பு கல், பவள பாறைகளை சுற்றுலாப் பயணிகள் பெயர்த்தெடுத்து செல்வதை தடுத்து, கட்டடங்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களை ஆழிப்பேரலை இரையாக்கியது. ரயிலில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த 120 மணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால், தனுஷ்கோடியே சின்னாபின்னமாகி கிடந்தது. போர் நடந்தது போல் பார்க்கும் இடமெல்லாம் மனித சடலங்களே காட்சியளித்தன. தனுஷ்கோடி ஒரே நாள் இரவில் அழிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புயலால் சேதமடைந்த விநாயகர் கோயில், தேவாலயம், அஞ்சலக கட்டடங்கள் வரலாற்றின் அரிச்சுவடாக இன்றளவும் காட்சியளித்து வருகின்றன. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள், இந்த சிதிலமடைந்த கட்டடங்களை பார்த்து செல்கின்றனர்.