ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர்!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், வேளாண் சீர்திருத்த சட்டங்கள் பற்றி விவாதிக்கவும் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என கடந்த மூன்றாம் தேதி காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு் கடிதம் எழுதியிருந்தார். நாடாளுமன்ற வரலாற்றில் 1975, 1979 மற்றும் 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.