நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலே எடை) விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேல் கூடுதலாக தேவைப்பட்டால் மானியமில்லாமல் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இந்நிலையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை தற்போது சென்னையில் 1,410 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் 1,296 ரூபாயாக உள்ளது. கொல்கத்தாவில் 1351 ரூபாயாகவும், மும்பையில் 1,244 ரூபாயாகவும் உள்ளது.



