மாணவர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது !

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட அணைத்து கல்வி நிறுவனங்களும் இப்போது தான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறக்க அனுமதித்தது.சேலத்தில் நேற்று மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பள்ளி மூடப்பட்டன.

பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது என்னவென்றால் ,சளி, இருமல், தலைவலி போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களின் பரிந்துரையின்படி பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது மேலும் பெற்றோர்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.