உலக சுகாதார அமைப்பின் பகீர் அறிவிப்பு !

கரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி இப்போது வரை உலகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த வருடம் போடப்பட்டது.குறைய தொடங்கிய தொற்று தற்போது மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் கூறுவது,தடுப்பூசியில் 70 சதவிகித குறைந்தபட்ச பாதுகாப்புக்கு வந்தவுடன் தொற்றுநோய் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை கரோனா பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறார்.ஐரோப்பிய ஒன்றியத்தில், 36.6 சதவீத மக்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.