மூன்று மாவட்டங்களில் தமிழக முதல்வர் இன்று ஆய்வு !

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும் இந்த ஊரடங்கு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கோவையில் கரோனா பரவல் அதிகம் இருக்கிறது.. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது.

கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வருகிறார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் இன்று காலை 10 மணி முதல் 10.30 மணிவரை ஆய்வு செய்கிறார்.