தாலிபான்களைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் தாக்குதல்

பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மோகித் யூசுப். இவர் சமீபத்தில் அமெரிக்காவின் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இதனை அடுத்து இவர் கூறிய கருத்து ஒன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.

அமெரிக்காவில் 2000ம் ஆண்டுக்குப் பின்னர் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற ட்வின் டவர் தற்கொலைப்படைத் தாக்குதல் உலகையே அச்சுறுத்தியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் அல்கொய்தா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தியது.இதற்கு மூளையாக செயல்பட்டவர் அப்போதைய அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன். இந்த தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆன நிலையில் டைம்ஸ் இதழுக்கு யூசுப் பேட்டி அளித்தபோது ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்களை அங்கீகரிக்க விட்டால் இரண்டாவது முறையாக செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவில் நடைபெறும் என்று யூஸுஃப் கூறியதாக செய்தி வெளியானது.பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரது இந்த கருத்து அமெரிக்காவை கொதிப்படையச் செய்தது. மேலும் சமூக வலைதளங்களில் இவரது கருத்து விவாதத்துக்கு உள்ளானது. பிரச்னை பெரிதானதை அறிந்துகொண்ட யூசுஃப் தான் அவ்வாறு கூறவில்லை என்றும் தனது கருத்து பத்திரிகையில் திரித்து வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான இந்த கட்டுரையில் யூசுஃப் பேட்டி அளித்தபோது இவ்வாறு பேசினார்.