தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு !

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்.மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் , ஆவின் பால் விலை குறைப்பு , கரோனா நிவாரணம் போன்ற பல அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்,தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மெட்ரிக் 500 டன்னாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

தமிழகத்திற்கான ஒதுக்கீடு 220 டன் ஆக உள்ளது என்றும், எனவே மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்வதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளு எனவும் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

தற்போது தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.