மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் – தமிழக அரசு !

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

இத்திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.