கோவிஷீல்டு’ தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தவில்லை – அமைச்சர்

ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் தமிழகத்தில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அது பற்றி மேலும் அவர் பேசியதாவது, தற்போது 46 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இறப்பு சதவீதமும் 1.6ல் இருந்து 1.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்க உலகளவில் முகக் கவசம் மட்டுமே மகத்தான ஆயுதமாக உள்ளது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் பயன்படுத்தினால் தொற்றை குறைக்க முடியும்.

தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் இல்லை. அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here