முதல்வர் வேட்பாளருக்கான விடை 7ஆம் தேதி தெரியும் -அமைச்சர் காமராஜ்

முதல்வர் வேட்பாளருக்கான விடை ஏழாம் தேதி தலைமை கழகம் அறிவிக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே நேரடி நெல் கொள்முதலை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லின் ஈரப்பதம் என்பது தற்காலிக பிரச்சினைதான் அது சரி செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நேற்று விடுமுறை என்பதால் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தெரிவித்தார்.

மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விடைக்கு வருகிற 7ஆம் தேதி தலைமை கழகம் அறிவிக்கும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.