பிரதமருடன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்திப்பு !

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று தமிழக முதல்வரானார் ஸ்டாலின்.தமிழகத்தில் அதிமுக எதிர் கட்சியாக இருந்துவருகிறது.

தமிழக தேர்தலுக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.

ஓபிஎஸ்-இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்து பேசினர்.நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இந்த சந்திப்பில் அதிமுகவின் முக்கிய தலைவர்களான தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தன.இந்த சந்திப்பு அரசியல் தொடர்பான சந்திப்பாக இருக்கும் என்றே கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் , அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும், கூறப்படுகிறது.