2 மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்ய முடிவு:எடியூரப்பா !

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும், ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர்.இந்நிலையில், 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுகுறித்து அவர் பேசியது,அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது என்னை மத்திய அமைச்சர் பதவியை ஏற்குமாறு கூறினார். ஆனால் நான் கர்நாடகாவில் தான் இருப்பேன் என அவரிடம் கூறினேன்.மேலும் பேசிய அவர் , விவசாயிகள், தலித்துகள் மற்றும் இந்த மாநில மக்களுக்காக தனது அரசாங்கம் போராடியது என்றார்.

மேலும் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் கூறினார்.எனக்கு எப்போதுமே அக்னி பரீட்சை நடைபெறுகிறது.தான் பதவி விலகுவதாக எடியூரப்பா அறிவித்தார். பிற்பகலில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.