எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு – அதிமுக !

தமிழக்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையில் கடும் போட்டி நிலவியது.இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானார்.

மேலும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று எதிர் கட்சியாக மாறியுள்ளது. இதனால் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலேயே கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.இதில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று தேர்தெடுக்கப்படுவர் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஓபிஎஸ் தான் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், ஈபிஎஸ் தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.