விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன!!!

விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ”விவசாயிகளை திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் விவசாயிகளை திசை திருப்ப தி.மு.க, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை, தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர். அவர்கள் ஏமாற மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களால் விவசாயிகள் அடையப் போகும் நன்மைகளை விவசாயிகளிடம் எடுத்துரைக்க வரும் 8ம் தேதி முதல் மக்கள் இயக்கம் நடத்த உள்ளதாகவும் அதில் பாஜக நிர்வாகிகள் சென்று விவசாயிகளை சந்தித்து எடுத்துச் சொல்வார்கள் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.