10-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10வது நாளை எட்டியுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தங்கள் முடிவில் தீர்க்கமாக இருப்பதால் மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. நாடு முழுக்க இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி தொடர்ந்து குவிந்து வருவதால் பாதுகாப்பு அளிக்க போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.