நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் மோடி அரசு நவம்பர் 19ஆம் தேதிமுதல் கடந்த 16 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையை 13 மடங்கு அதிகரித்துள்ளது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 71.41 ரூபாயாக இருந்தது. டீசல் 55.49 ஆக இருந்தது. அவை டெல்லியில் 83.13 ரூபாய், 73.32 ரூபாயாக உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை டிசம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி பீப்பாய்க்கு 48.18 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது என்று நாம் கருதினால், அதாவது 56 விழுக்காடு சரிந்து, பாஜக அரசு பெட்ரோல்-டீசல் விலையை வான் அளவுக்கு உயர்த்தியுள்ளது.