சம்பளம் கேட்டதிற்கு கொடூரமாகத் தாக்கும் மேற்பார்வையாளர்கள்!

கரோனா பரவலால் கடந்த சில மாதங்களாகத் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால், சுரங்கத்தில் வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள் வேலைபார்க்க மறுத்துள்ளனர். வேலை பார்க்க மறுத்த பட்டியலினத் தொழிலாளர்களை மேற்பார்வையாளர்கள் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கினர்.

இது தொடர்பான காணொலி காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனைக் கண்ட இந்திய பலாய் சமாஜ் கூட்டமைப்பு இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காவல் துறைத் துணைத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. தொழிலாளர்களைத் தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைவைத்தனர்.இதனையடுத்து, மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.