குறிப்பிட்ட காலவதிக்கு முன் சசிகலா விடுதலை இல்லை

கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியயோர் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு 5 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதாக பரபரப்பான தகவல்கள் வெளியே வந்தன.

ஆனால் தற்பொழுது மீண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி என்பவர் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என சிறைதுறை இடம் கேட்டதற்கு சிறைத்துறை அவருக்கு விளக்கமளிக்கையில், சசிகலா 10 கோடி சிறை துறைக்கு அபராதம் கட்டி விட்டதாகவும் சொத்துக்குவிப்பு வழக்கு ஊழல் வழக்கு என்பதால் அவர்களுக்கு எந்த ஒரு நன்னடத்தை முறையிலும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. எனவும் ஆகையால் 9 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 60 வயதைத் தாண்டி இருந்தால் மட்டும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்வார்கள் எனவும் சிறைத்துறை விளக்கமளித்துள்ளது.

குறிப்பிட்ட காலவதிக்கு முன்பு எக்காரணத்தைக் கொண்டும் சசிகலா விடுதலை ஆக மாட்டார் இந்த நிலையில் சசிகலா வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவார் என அச்சத்துடன் இருந்த அதிமுக வினர் சசிகலா வராததால் அதிமுக வினர் அனைவரும் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும் காலாவதி பிப்ரவரி மாதம் வரை காலாவதி உள்ளதாகவும் சிறைத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.