டெல்டா வைரஸ்தான் இப்போது கவலையளிக்கக் கூடியது- உலகச் சுகாதார அமைப்பு

டெல்டா என்று உலகச் சுகாதார அமைப்பு பெயரிட்ட ஒரேயொரு உருமாறிய கொரோனா வைரஸ்தான் இப்போது கவலையளிக்கக் கூடிய வேரியண்ட் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வைரஸ் முழுதுமே கவலையளிக்கக் கூடிய பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய உலகச் சுகாதார அமைப்பு தற்போது B.1.617.2 உருமாறிய கொரோனா வைரஸ்தான் கவலையளிக்க கூடிய ஒரே வேரியண்ட் என்று தெரிவித்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பு தனது வாரந்திர தொற்று நோய் புதிய அறிவிப்பில், “B.1.617.2 வேரியண்ட் மட்டும்தான் இப்போது மக்களிடத்தில் பரவும் பெரிய ரிஸ்க்கான வைரஸ் ஆகும் பி.1.617 வைரஸின் மற்ற பிரதிகள் அல்லது உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் குறைந்த அளவில்தான் பரவுகிறது” என்று கூறியுள்ளது.

ஆகவே B.1.617.2 உருமாறிய கோரோனா தான் இப்போது கவலையளிக்க கூடிய வேரியண்டாக உள்ளது. அதாவது டெல்டா என்று கிரேக்க பெயரிடப்பட்ட வேரியண்ட் மட்டும்தான் இப்போது கவலையளிக்கக் கூடியதாக உள்ள்து.