கருணாநிதியின் பிறந்தநாள்: 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம்

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தாருக்கு, 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளாகிய நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

அதபடி, 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலைப் பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு மற்றும் துணிப்பை ஆகிய 13 பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட இருக்கின்றன.

இந்தப் பொருட்கள் அனைத்து நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் குடோனுக்கு தற்போது கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொருட்களும் ஒவ்வொரு துணிப்பையில் போடப்பட்டு, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.