பிரபல தயாரிப்பாளர் ஜி.ராமசந்திரன் காலமானார்

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் மறைவு செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

‘களத்தூர் கண்ணம்மா’, ‘நாட்டுப்புற பாட்டு’, ‘எட்டுபட்டி ராசா’, ‘வீர தாலாட்டு’, ‘ராஜாதி ராஜா’, ‘மனுநீதி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் நடித்தவர் ஜி.ராமசந்திரன். இது தவிர தனது ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் சார்பாக ‘மனுநீதி’, ‘சவுண்ட் பார்ட்டி’, ‘காசு இருக்கணும்’, ‘எங்க ராசி நல்ல ராசி’, ‘காதலி காணவில்லை’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். பல்வேறு கன்னடப் படங்களில் நடித்தும் தயாரித்தும் இருக்கிறார்.

ஜி. ராமச்சந்திரனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை மாங்காட்டில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் நடைபெறவுள்ளது.