25 ஆயிரம் டன் வெங்காயம், 30 ஆயிரம் டன் உருளை இறக்குமதி செய்ய முடிவு

25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஏற்கனவே 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் காரிப் பருவ வெங்காயம் அறுவடை செய்யப்படுவதால் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.