உரிமம் பெறாத சிறு உணவகங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

முறையாக பதிவு செய்யாமல், வீடுகளில் உணவு சமைத்து, அதை, ‘ஆன்லைன்’ வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை வழங்கி வருபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறு உணவகங்கள், வீடுகளில் சமைத்து, ஆன்லைன் வாயிலாக சேவை அளிக்கும் நபர்கள் ஆகியோர், முறையான உரிமம் மற்றும் பதிவு பெறவில்லை எனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமம் பெறாதவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.அந்த உத்தரவை, மாநில உணவு பாதுகாப்பு துறை நிறைவேற்ற துவங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.