தமிழகத்தில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி !

இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

இந்த தேர்வில் 16.14 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வை எழுதினார்.நீட் தேர்வு வேண்டும் என்று ஒரு புறம் சொல்லுகின்றனர் மறுபுறம் வேண்டாம் என்று சொல்லும் மக்களும் உள்ளனர்.

இந்த நீட் தேர்வால் எண்ணற்ற சோகங்கள் நம் தமிழ்நாட்டில் அரங்கேறியது.இந்த வருடம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இரண்டு மாணவிகள் மதிப்பெண் குறைந்து விடும் என்ற காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டனர்.இந்நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் அவர் தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : என்னது விண்வெளிக்கு சுற்றுலா போறாங்களா