என்னது விண்வெளிக்கு சுற்றுலா போறாங்களா !

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று இரவு நான்கு அமெரிக்கர்களுடன் விண்வெளிக்கு சுற்றுலா சென்றது.இந்த விண்வெளி பயணத்தில் சென்றது விண்வெளி வீரர்கள் இல்லை சாதாரண மனிதர்கள் தான்.

பயணிகள் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலில் பறக்கிறார்கள், அவர்கள் 360 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி மூன்று நாட்கள் சுற்றி வர வேண்டும்.

3 நாட்கள் பூமியின் வட்டப்பாதையில் சுற்றிவிட்டு ப்ளோரிடா கடற்கரை அருகே விண்கலம் தரையிரங்கும் என கூறப்பட்டுள்ளது.இந்த பயணத்தில் 29 வயதான மருத்துவ நிபுணர் மற்றும் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹேலி ஆர்சீனாக்ஸ், 42 வயதான பொறியாளர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி மற்றும் 51 வயதான கல்வியாளர் டாக்டர் சியான் ப்ரொக்டர் ஆகியோர் உள்ளனர்.

இந்த சம்பவம் வரலாற்றில் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிந்துரை