தமிழ்நாட்டில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிந்துரை !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

தற்போது இந்த ஊரடங்கில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு அறிவித்தது.

அதன் படி,செப் 1 முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதில் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து விரைவி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்.

இந்நிலையில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை