ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெற்றி பாதையில் சிந்து !

டோக்கியோவில் நடந்து வரும் ஒலி்ம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இ்ந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.இன்று நடந்த 2-வது சுற்றில் ஹாங்கா வீராங்கனை என்.ஒய்.சாங்கை வீழ்த்தி சி்ந்து காலிறுதிக்குமுந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் ஜே பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்துதரவரிசையில 34வது இடத்தில் உள்ள ஹாங்காங் வீராங்கனை என்.ஒய்.சாங் மோதினார்.

35 நிமிடங்கள் மட்டும் நீடித்த இந்த ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை சாங்கை 21-9, 21-16 என்ற புள்ளிகளில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றை சிந்து உறுதி செய்தார்.அடுத்த சுற்றில் டென்மார்க் வீராங்கனையும், தரவரிசையில் 12-வதுஇடத்தில் உள்ள மியா பிளிச்பீல்டை எதிர்கொள்கிறார் சிந்து.