நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் !

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.இவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை, காதல் கொண்டேன் போன்ற படங்களில் ஆரம்பகாலத்தில் நடித்தார்.

புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமாரின் நடிப்பில் ரசிகர்கள் இன்றளவு ரசிக்கவைத்தார்.தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த சம்பவம் எனில் அவர் வெற்றிமாறனுடன் கைகோத்ததுதான்.

அவரது எதார்த்த நடிப்பில் வெளிவந்த படம் ஆடுகளம் இதில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ’3’. இந்தப் படத்தில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக பிரபலமானது.

மேலும் ராஞ்சனா, ஷமிதாப் என்ற ஹிந்தி படங்களில் நடித்தார்.அடுத்து இவரது மிரட்டும் நடிப்பில் வெளியானது அசுரன் திரைப்படம்.இந்த படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.தனுஷ் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இவரது ரசிகர்கள் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி தங்க நாணயம் மாடலிலும் ஒலிம்பிக் பதக்கம் மாடலிலும் வடிவமைத்திருக்கும் காமன் டிபியில் தனுஷ் பகிரப்பட்டுவருகிறது.