ஆரோக்கியத்துடன் வாழ தினமும் கீரை சாப்பிடுங்கள் !

தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் இரும்புச் சத்துக்கள் கிடைக்கும்.

முருங்கை கீரை:முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ,பி,சி புரதம், இரும்புச் சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அரைக்கீரை: அரைக்கீரையுடன் வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் புதுரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும்.

பாலக்கீரை: பாலக்கீரையில் வைட்டமின் ஏ,பி ,சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு பாலக்கீரை சிறந்தாகும். அதோடு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.