பத்ம விருது 2022: முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய அரசு

2022-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை தொடர்பான சந்தேகங்கள் குறித்து www.mha.gov.in என்ற இணைதள முகவரியில் நிவர்த்தி செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.