இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொற்று அதிகம் பரவும் மாநிலமாக கர்நாடக இருந்து வருகிறது.
கர்நாடகாவில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.தற்போது ஜூன் 14 வரை ஊரடங்கு உள்ளது.தொற்று குறையாத காரணத்தினால் ஊரடங்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.



