அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ‘ஸ்புட்னிக் 5

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பு மருந்து உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளும் இந்த தடுப்பு மருந்து அதிக பலன் அளித்து வருகின்றது. ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்து 94.3 சதவீதம் பலன் அளிப்பதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தகவல் அளித்துள்ளது.

பஹ்ரைன் நாட்டில் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்புமருந்து பயன்படுத்தப்பட்டதை அடுத்து அதன் வீரியம் 94.3 சதவீதம் எனத் தெரியவந்துள்ளது. மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மருந்து சோதனை நிபுணர் குழு ஆகிய அமைப்புகளும் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பு மருந்தின் வீரியத்தை சோதித்தன.

கடந்த மே 14-ஆம் தேதி இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லெவ்ரட்ரி நிறுவனம் இதனை சோதித்து இதன் தரத்தை உறுதி செய்தது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்ஜி லாவோர்வ் இதற்கு பெருமிதம் தெரிவித்துள்ளார்.