வங்கிக்கடன் தவணை திரும்பி செலுத்த கால அவகாசம் வேண்டும் – சரத்குமார்

6 மாதங்களுக்கு வங்கிகள் எவருக்கும் அழுத்தம் தராமல் சுதந்திரமாக தொழில் செய்ய வழிவகுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சரத்குமார்.

மேலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி யாருக்கும் எந்தவொரு வருமானமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் சூழலில், ஒரு தொழிலதிபர் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறார், 50% ஊதியம் வழங்குகிறார், 50% பணியாளர்களை வைத்து கொண்டு வேலை வாங்குகிறார், நிறுவனத்தை நடத்த முடியாமல் தவிக்கிறார்.

இது ஒரு நிறுவனத்தின் நிலை மட்டுமல்ல, லட்சக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்களின் நிலையும் இது தான். எனவே, நிறுவனத்தின் சிரமங்களை குறைக்கவும், தனிநபர் பொருளாதார சிரமங்களை குறைக்கவும் மத்திய அரசு நிச்சயமாக இந்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு வங்கிக்கடன் தவணை திரும்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.