இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை – மத்திய அரசு !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.தற்போது ,மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவுமில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நேற்று தடுப்பூசி திருவிழாவின் மூன்றாம் நாளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன.

இதுவரையில் நாட்டில் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 11,10,33,925 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்போது இதன் கரோனா தடுப்பூசி உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.