டிசம்பர் மாதம் இறுதிவரை வெங்காய விலை குறையாது!!!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிவரை வெங்காயத்தின் விலை குறையாது என்றும் ஆனால், உருளைக்கிழங்கின் விலை குறையும் என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் வைத்திருக்க வேண்டிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, மொத்த விற்பனையாளர் 25 டன் வெங்காயமும், சில்லறை விற்பனையாளர்கள் இரண்டு டன் வெங்காயம் வைத்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.