தாய்மையை உணரும் அனுஷ்கா சர்மா

நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது கருவுற்றிருக்கும் நிலையில், தனது தாய்மை மிளிரும் மகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பீச் நிற உடையில், சூரிய ஒளி தன் மீது படர சோபாவில் அமர்ந்த வண்ணம் இந்தப் புகைப்படத்தில் அனுஷ்கா உள்ளதை அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

‘ஹே’ எனும் கேப்ஷனுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம், 15 லட்சம் லைக்குகளை பெற்று அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.