தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு கட்டாயப்படுத்தாது எந்த நாட்டில் தெரியுமா !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா தொற்று கடந்த வருடம் வந்து இந்த உலகை தன்வசமாக்கியுள்ளது.இதனை தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.மேலும் தடுப்பூசி போட்டுகொள்ளுவது மிகஅவசியம் என்று உலக நாடுகள் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஜெர்மனி கட்டாயமாக்காது என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியது,ஜெர்மனி மக்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வது உறுதி செய்யப்படும். இருப்பினும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை ஜெர்மனி கட்டாயமாக்காது.

மேலும் சமூக இடைவேளை மற்றும் முகக்கவசம் அணிவது கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது என அதிபர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.