கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டவர்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென் கொரியா அரசு கூறுவது, கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை போட்டுக் கொண்டால் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்துக்குள்ளாக 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திவிடத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைச் செலுத்திக் கொண்டவர்கள் பொதுவெளியில் வரும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் அறிவித்தன. தற்போது தென்கொரியாவும் அறிவித்துள்ளது



