நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கால்வாய்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

கனமழையால் சாலைகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையில் அதிகபட்சமாக மயிலாடியில் 236.2 மில்லி மீட்டர் (23 செ.மீ.) பதிவாகி இருந்தது.