முகக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது – புதுவை !

கரோனா தொற்று பரவி வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்துகிறது.தற்போது தமிழகத்தை அடுத்து புதுவையிலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் கூறியதாவது, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வோருக்கு வரும் 17ம் தேதி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

முகக்கவசம் அணிந்து வராவிட்டால் கண்டிப்பாக பெட்ரோல், டீசல் தரப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.