கர்நாடகாவில் ஊரடங்கு இல்லை – எடியூரப்பா !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியதன் காரணம் மக்கள் தனிமனித இடைவேளை மற்றும் முகக்கவசம் இவைகளை சரியாக பின்பற்றாதது தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனாபரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து எடியூரப்பா கூறியது,கரோனா கால கட்டுப்பாடு காரணமாக 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது. மக்கள் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.