தடுப்பூசி போடும் பணியில் முனைப்புடன் செயல்படும் அமெரிக்கா !

கரோனா தடுப்பூசி போடும் பணி உலக நாடுகளில் நடந்து வருகிறது.இந்த கரோனா தொற்றால் அதிகம் பாதிக்க பட்ட நாடுகளில் முதலில் உள்ளது அமெரிக்கா தான். மேலும் மார்ச் 29ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 63,000 பேர்.

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் நாடு முழுவதும் சராசரியாக 27 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது,ஏப்ரல் 19 ம் தேதிக்குள் அமெரிக்காவில் 90%பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.