புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை !

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களவையில் அவர் தெரிவித்தது,சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் உற்பத்தி பொருளை பெற்று அதற்குரிய தொகையை 45 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலுவை தொகை வழங்கப்படுகிறது.

ஜிஎஸ்டி தொகை வழங்குவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.கொரோனா தொற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்க புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.மேலும் நமது பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.